# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, வரலாற்றில் முதல் முறையாக 300 பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு ஆணைகள் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத்தன்மையுடன் (Transparency) வழங்கப்பட்டதால் மின்வாரிய பொறியாளர்கள் மகிழ்ச்சி

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.C.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 2000 முதல் 2002 ஆம் ஆண்டு உதவி பொறியாளர்களாக (மின்னியல்) பணியில் சேர்ந்தவர்களுக்கு, முதற்கட்டமாக 300 செயற்பொறியாளர் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன. வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை மின்வாரிய பொறியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- **Published**: 2026-06-06
- **URL**: https://news.nammamap.in/press-release/21917-tamil-nadu-300-electricity-engineers-promotion

---

வரலாற்றில் முதல் முறையாக 300 பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டது.

2000 முதல் 2002 ஆம் ஆண்டு உதவி பொறியாளர்களாக (மின்னியல்) பணியில் சேர்ந்த 379 தகுதியுடைய பொறியாளர்களில் முதற்கட்டமாக 300 பேருக்கு செயற்பொறியாளர் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு விவகாரங்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் தீர்வு காணப்பட்டது.

இந்த பதவி உயர்வுகள் ஊழியர்களின் மனஉறுதியை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், மின்வாரியத்தின் செயல்திறன் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தையும் மேலும் மேம்படுத்த உதவும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)