# பதிவுத்துறையில் இணையவழியில் "வருகை இல்லா ஆவணப் பதிவு" (Anywhere Registration) ஆவணப்பதிவு கட்டாயாமாக்கல் தொடர்பான அறிவிப்பு

> பதிவுத்துறையில் பொதுமக்கள் தங்கள் ஆவணங்களை இணையவழியே எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்ய 'வருகை இல்லா ஆவணப்பதிவு' முறை கட்டாயமாக்கப்படவுள்ளது. இதன் மூலம் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் ஆவணங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
- **Published**: 2026-06-07
- **URL**: https://news.nammamap.in/press-release/21918-anywhere-registration-online-document-registration

---

'வருகை இல்லா ஆவணப்பதிவு' கட்டாயமாக்கப்படவுள்ளது.

முதல் விற்பனை மனை, முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள், வங்கிகளில் பெறும் கடனுக்கான அடமானம் மற்றும் இரசீது ஆவணங்கள் ஆகியவற்றை சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்யலாம்.

ஆவணம் எழுதிக் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் அனைவருக்கும் ஆதார் அட்டை மேலேற்றம் மற்றும் கைரேகை அல்லது கருவிழி படலம் வழி ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்.

இணைய இணைப்பு, UIDAI அங்கீகரிக்கப்பட்ட எல்1 விரல் ரேகை இயந்திரம், கருவிழிப்படலம் கவரும் கருவி மற்றும் புகைப்படக் கருவி (Webcam) போன்ற தொழில்நுட்ப தேவைகள் அவசியம்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)