# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், இன்று (08.06.2026) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத் துறை சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆய்வு.

> மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின் பேரில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து உயர் அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார்.
- **Published**: 2026-06-08
- **URL**: https://news.nammamap.in/press-release/21920-transport-minister-review-meeting-state-transport-corporations

---

பேருந்துகளை நேரத்திற்கு இயக்குதல், தூய்மையாக பராமரித்தல் மற்றும் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ளுதல்.

மாணவர்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்தல்.

பேருந்துகளை உரிய நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குதல்.

பணியாளர்களின் நலன் மற்றும் பணி பாதுகாப்பு, பணிமனை தர உயர்வு, உட்கட்டமைப்பு மேம்பாடு.

பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் சீரான பேருந்து இயக்கம்.

குளிர்சாதன பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் புதிய வழித்தடங்கள் உருவாக்குதல்.

உணவகங்களில் உணவின் தரத்தை மேம்படுத்துதல்.

ஓட்டுநர்கள் பணிநேரத்தில் அலைபேசி பயன்படுத்துவதை தவிர்த்தல்.

போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களில் புதிய வழித்தடங்கள் உருவாக்குதல்.

சென்னை ஒன் செயலி பயன்பாட்டை மேம்படுத்துதல், இணையதள முன்பதிவில் குரல் வழி கட்டளை வசதி ஏற்படுத்துதல்.

பேருந்துகளில் காலி இருக்கைகள் மற்றும் பேருந்து வருகை நேரத்தை அறியும் செயலி உருவாக்குதல்.

தொலைதூர பேருந்துகளை முழுமையாக Online Booking முறைக்கு கொண்டு வந்து முன்பதிவில்லா இருக்கைகளை பூஜ்ஜியமாக்குதல்.

பேருந்துகள் மற்றும் சொத்துகள் மூலம் விளம்பரம், வாடகை மூலம் இதர வருவாயை உயர்த்துதல்.

மெட்ரோ ரயில் இணைப்பை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தல்.

பேருந்து நிலையங்களில் ஒலிபெருக்கி மற்றும் நிகழ்நேர தகவல் பலகைகள் மூலம் உதவி எண் மற்றும் புறப்படும் நேரத்தை அறிவித்தல்.

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை விரிவுபடுத்துதல்.

பேருந்துகளின் முகப்பு விளக்கு, பின்புற சிவப்பு விளக்கு மற்றும் Reflective Sticker ஆகியவற்றை சரிபார்த்து தேவையான மாற்றங்களை செய்தல்.

மாநகர் போக்குவரத்துக் கழக ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்து, 149 கட்டணமில்லா தொலைபேசி மூலம் வரும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)