# அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவியும் உபகரணங்களும் வழங்கினார்

> மாண்புமிகு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள், பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவியும், பாரா துப்பாக்கி சுடுதல் வீரர் மனோஜ்குமாருக்கு ரூ. 6.27 லட்சம் மதிப்பில் துப்பாக்கி சுடும் உபகரணங்களும் வழங்கினார். மேலும், ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையையும், ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் ஒரு விளையாட்டு வீரருக்கு நிதி உதவியையும் வழங்கினார்.
- **Published**: 2026-06-09
- **URL**: https://news.nammamap.in/press-release/21923-financial-aid-and-equipment-athletes

---

பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான ரூ. 10 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

பாரா துப்பாக்கி சுடுதல் வீரர் மனோஜ்குமார் அவர்களுக்கு ரூ. 6.27 லட்சம் மதிப்பில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு உபகரணம் வழங்கப்பட்டது.

ஆசிய U 20 தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டது: திரு. ஜித்தின அர்ஜுனன், செல்வி. சாதனா ரவி, செல்வி. ஜி.பாவனா ஆகியோருக்கு தலா ரூ. 3 லட்சமும் (வெள்ளிப் பதக்கம்), திரு. எஸ். ரஞ்சித் குமார் அவர்களுக்கு ரூ. 2 லட்சமும் (வெண்கலப் பதக்கம்).

2026 ஆசிய கடற்கரை சர்வதேச விளையாட்டுப் போட்டிக்கான உயர்தர உபகரணங்கள் வாங்குவதற்கு சைலிங் விளையாட்டு வீரர் சித்தரேஷ் நடேசனுக்கு ரூ. 4.65 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)