# பட்டு வளர்ச்சி மற்றும் கைத்திறன் மேம்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம்

> சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் பெ. மதன்ராஜா தலைமையில், பட்டு வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில்துறை மேம்பாடு மற்றும் நலன் குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
- **Published**: 2026-06-09
- **URL**: https://news.nammamap.in/press-release/21930-review-meeting-sericulture-handicrafts-development

---

பட்டு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் மானிய உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

படித்த வேலையில்லா இளைஞர்கள், தொழில்முனையும் மகளிர் ஆகியோரை பட்டுநூற்பு மற்றும் முறுக்கேற்றல் தொழிலில் ஈடுபடுத்தும் வகையில் பயிற்சி வழங்கிட வேண்டும்.

பாரம்பரியமான கைவினைப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கைவினைஞர்களின் படைப்புகளை விற்பனை செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

இணையதளம் வழியாக அனைத்து வகையான கைவினைப் பொருட்களின் விற்பனையை கடந்த ஆண்டைவிட இரு மடங்கு அதிகமாக உயர்த்த வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)