# மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு. கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

> மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு. கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் அவர்கள் பேரிடர் மேலாண்மை துறையின் 2026 மாநில வெப்ப செயல் திட்டத்திற்கான புத்தகத்தை வெளியிட்டார்.
- **Published**: 2026-06-09
- **URL**: https://news.nammamap.in/press-release/21932-district-revenue-officers-review-meeting

---

மாவட்ட வருவாய் அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு அமைச்சர் பேரிடர் மேலாண்மை துறையின் 2026 மாநில வெப்ப செயல் திட்டத்திற்கான புத்தகத்தை வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வெப்ப அலை அபாயங்களை முன்னிட்டு, மாநில அளவிலான வெப்ப செயல் திட்டம் 2026 தயாரிக்கப்பட்டுள்ளது.

வெப்ப பாதிப்பு மற்றும் அபாய மதிப்பீடு கிராம மற்றும் வார்டு அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெப்ப அலைக்கான முன்னெச்சரிக்கை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிறுவன ஒருங்கிணைப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும், மாநகராட்சிகளிலும், மாவட்ட மற்றும் மாநகர வெப்ப செயல் திட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் தகவல் பரப்புரை நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

துறைவாரியான முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு செயல்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)