# தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (09.06.2026) சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்கி வைக்கும் விதமாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினையை வெளியிட்டு, அதற்கென வடிவமைக்கப்பட்ட வாகனத்தையும் அறிமுகப்படுத்தினார்.
- **Published**: 2026-06-09
- **URL**: https://news.nammamap.in/press-release/21933-chief-minister-inaugurates-singapen-special-task-force-women-safety

---

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கி வைக்கப்பட்டது

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினை மற்றும் அதற்கென வடிவமைக்கப்பட்ட வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது

2,545 புதிய பணியிடங்களை உருவாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது

319 நான்கு சக்கர வாகனங்களும் 101 இருசக்கர வாகனங்களும் கொள்முதல் செய்யப்படும்

நிகழ்நேரக் காணொளி ஒளிபரப்புத்திறன் கொண்ட கேமராக்கள் பொருத்திய உடுப்புகளும் (Body Worn Cameras) மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களும் (Drones) வழங்கப்படும்

திட்டத்திற்காக 354 கோடி ரூபாய் நிதி மற்றும் செயல்பாட்டிற்காக 2.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது

மாநிலம் முழுவதும் 270 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை கள அலகுகள் செயல்படும்

தற்போது 70 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைப் பிரிவுகள் 140 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 420 காவலர்களுடன் செயல்படத் தொடங்கும்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)