# சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 13.06.2026 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்

> சென்னையிலுள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வருகின்ற 13.06.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.
- **Published**: 2026-06-10
- **URL**: https://news.nammamap.in/press-release/21937-public-distribution-system-grievance-redressal-camp-chennai

---

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 13.06.2026 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.

நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)