# சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விரைந்து மின்தடை சீரமைக்க 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 ரோந்து வாகனங்களை அமைச்சர் துவக்கி வைத்தார்

> சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடங்கல்களை விரைந்து சீர்செய்யும் வகையில் 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
- **Published**: 2026-06-10
- **URL**: https://news.nammamap.in/press-release/21940-chennai-power-outage-restoration-committees-vehicles

---

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்தடை சீரமைக்க 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு ரோந்து வாகனங்களின் துவக்கம்.

மாநிலம் முழுவதும் 77 புதிய மின்தடை நீக்க மையங்கள் (Fuse of Call) உருவாக்கப்பட்டது.

5 எம்.ஆர்.டி. சிறப்பு குழுக்கள், புதைவட கேபிள் பழுதுகளுக்கு 4 வாகனங்கள் மற்றும் மேல்நிலை கம்பிகள் பழுதுகளுக்கு 7 வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தம்.

மின்தடை மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க மாநிலம் முழுவதும் 10 உயர்மட்ட சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பு.

அவசரகால பராமரிப்பு மற்றும் உடனடி சீரமைப்பு பணிகளுக்காக கள அலுவலர்களுக்கு நிதி அதிகாரம் அதிகரிப்பு.

சென்னை மாநகரம் முழுவதும் மின் விநியோகத்திற்காக 125 ரோந்து வாகனங்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், களப்பணியாளர்கள் மூலம் இரவு நேர ரோந்து உள்ளிட்ட சிறப்பு 'போர்க்கால' நடவடிக்கைகள் அமல்.

மீண்டும் மீண்டும் மின்தடை ஏற்படும் பகுதிகளில் 24 மணி நேர ரோந்து மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தல்.

அணுக முடியாத பகுதிகளுக்கு ஆட்டோக்கள் உட்பட அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் வாகன வசதிகள் வழங்கப்பட்டது.

மின்தடை மற்றும் சீரமைப்பு விவரங்கள் மின்னகம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படைத்தன்மையுடன் அறிவிக்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)