# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினச் செய்தி

> உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமான ஜூன் 12-ஐ முன்னிட்டு, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களுக்குக் கல்வியையும், மகிழ்ச்சியான வாழ்வையும் வழங்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- **Published**: 2026-06-11
- **URL**: https://news.nammamap.in/press-release/21942-mk-stalin-anti-child-labour-day

---

ஜூன் 12 உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளால் வேலைக்குச் செல்லும் குழந்தைகளை அக்கொடுமையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தைப் பருவத்தையும், முறையான கல்வியையும் வழங்கிட வேண்டியது அனைவரின் கடமையாகும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் சுதந்திரமாக வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் கல்வி உரிமை அவசியமானதாகும்.

குழந்தைகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எதிராக எவ்வகையான தொழில்களிலும் குழந்தைகளைப் பணியமர்த்தக் கூடாது மற்றும் வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் பணியமர்த்தக் கூடாது.

குழந்தைகளைத் தொழிற்பணிகளில் ஈடுபடுத்தாமல் அவர்களுக்கான உரிமைகளைப் பேணிக்காத்து, முறையான கல்வி அளித்து, மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தை அவர்கள் பெறுவதை உறுதி செய்வதுடன் வளமான எதிர்காலத்தை உருவாக்குவதே தமிழ்நாடு அரசின் முக்கியக் குறிக்கோள்.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்திட தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

குழந்தைத் தொழிலாளர் முறையைத் தகர்ப்போம்! கல்வி அளித்து குழந்தைகளின் வாழ்வை ஒளிரச் செய்வோம்!

குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)