# தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 60 திட்டப்பகுதிகளில் ரூ.3 ஆயிரத்து 766.24 கோடி மதிப்பீட்டில் 28 ஆயிரத்து 551 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன - மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் அவர்கள் தகவல்

> தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 60 திட்டப்பகுதிகளில் ரூ.3 ஆயிரத்து 766.24 கோடி மதிப்பீட்டில் 28 ஆயிரத்து 551 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
- **Published**: 2026-06-11
- **URL**: https://news.nammamap.in/press-release/21943-tamil-nadu-urban-habitat-development-board-building-apartments

---

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 60 திட்டப்பகுதிகளில் ரூ.3,766.24 கோடி மதிப்பீட்டில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

சென்னையில் 21 திட்டப்பகுதிகளில் 7,179 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1,230.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன.

இதர மாவட்டங்களில் 39 திட்டப்பகுதிகளில் 21,372 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.2,535.82 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன.

ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் கீழ் 6 திட்டப்பகுதிகளில் ரூ.1,030 கோடி மதிப்பீட்டில் 5,457 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.210 கோடி மதிப்பீட்டில் 215 திட்டப்பகுதிகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்காக கட்டப்படும் குடியிருப்புகளை நல்ல தரத்துடனும், உறுதியுடனும், உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)