# மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இன்று (11.6.2026) புதுதில்லி, குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆற்றிய உரை.

> தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் புதுதில்லியில் நடைபெற்ற நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் ஒன்றிய அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகள் பற்றிய உரை.
- **Published**: 2026-06-11
- **URL**: https://news.nammamap.in/press-release/21946-tamil-nadu-chief-minister-niti-aayog-meeting-prime-minister

---

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் கூட்டுறவுக் கூட்டாட்சி மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குதல்

2036-க்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துதல்

இளைஞர் திறன் மேம்பாடு, கல்வி, புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பில் முதலீடு செய்தல்

செயற்கை நுண்ணறிவு, ஆழ்தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கான ஒன்றிய அரசின் ஆதரவைக் கோருதல்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான NEET தேர்வை எதிர்த்து, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கைக்கு அனுமதி கோருதல்

'வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம்' திட்டத்தை முன்மொழிதல்

கோயம்புத்தூரில் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி கோருதல்

பெண்களின் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் அதிரடிப்படை' மற்றும் சிசிடிவி வலைப்பின்னல் அமைத்தல்

ரூ.2,045 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்தல்

பாக் வளைகுடாவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்கவும், இலங்கை, பாகிஸ்தானில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும் ஒன்றிய அரசை வலியுறுத்துதல்

கடலோரப் பகுதிகளுக்கான நிரந்தர வெள்ளத்தடுப்புக் கட்டமைப்புகள் மற்றும் 'காலநிலைத் தாங்குதன்மை பெருந்திட்டம் 2045'க்கு ஒன்றிய அரசின் ஆதரவைக் கோருதல்

குலசேகரபட்டினத்தில் உள்ள விண்வெளி உற்பத்தி மையத்தை தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக அறிவிக்கக் கோருதல்

ஜி.எஸ்.டி. சாலையின் (NH-32) செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான பகுதியை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்தக் கோருதல்

NH-81 திருச்சி (பஞ்சப்பூர்) - ஜீயபுரம் - கரூர் பகுதியை ஆறு வழிச்சாலையாக (Six Lane) மேம்படுத்தக் கோருதல்

NH-81 கரூர் - கோயம்புத்தூர் பகுதியை ஆறு வழிச்சாலையாக (Six Lane) மேம்படுத்தக் கோருதல்

சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கக் கோருதல்

மாதவரம் - சோழவரம் இடையே உயர்த்தப்பட்ட வழித்தடம் அமைக்கக் கோருதல்

பாரத்நெட் இரண்டாம் கட்டத் திட்டத்தை முடித்து, அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளையும் இணையத்துடன் இணைக்க ஆதரவு கோருதல்

ஒகேனக்கல் மூன்றாம் கட்டக் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ரூ.2,283.40 கோடி நிதி உதவி கோருதல்

ஊரக வேலைவாய்ப்புகளை உருவாக்க 'வளர்ச்சியடைந்த இந்தியா - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதத் திட்டம்' (கிராமப்புறம்) கீழ் அனுமதி கோருதல்

'ஒருங்கிணைந்த கல்வி' திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி நிதியை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோருதல்

புதிய கல்விக் கொள்கை அல்லது மும்மொழிக் கொள்கையைத் திணிக்கக் கூடாது என வலியுறுத்துதல்

திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்கக் கோருதல்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)