# கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் வெளிப்படைத் தன்மையுடன் பணிகள் நடைபெறுவதை உறுதிசெய்யவும், அவர்களின் நடைமுறை சிக்கல்களையும் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கட்டுமான பொருட்கள் உரிய விலையில் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் கருத்துக்கள் பெற பல்வேறு சங்கப் பிரதிநிதிகளோடு மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு அவர்கள் ஆய்வு

> இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்தல், சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் மற்றும் கனிம கடத்தலைத் தடுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
- **Published**: 2026-06-11
- **URL**: https://news.nammamap.in/press-release/21950-stone-quarries-crushers-construction-materials-availability

---

கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் வெளிப்படைத்தன்மையுடன் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்தல்.

குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களின் நடைமுறை சிக்கல்களைக் களைதல்.

கட்டுமானப் பொருட்கள் உரிய விலையில் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்தல்.

அரசு புறம்போக்கு நிலங்களில் தகுதியான பகுதிகளைக் கண்டறிந்து ஏல முறையில் குத்தகை உரிமங்களை விரைவாக வழங்குதல்.

குவாரி குத்தகை உரிமம் வழங்கும் முறையை எளிமைப்படுத்துதல்.

சுற்றுச்சூழல் அனுமதியின் கால அளவை நீட்டிப்பது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

கனிம கடத்தலைத் தடுக்க புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் மின்னணு சீட்டு (e-way bill) அமல்படுத்துதல்.

சட்டவிரோத குவாரிப் பணிகளைத் தடுத்து, முறையான குத்தகைதாரர்களுக்கு ஆதரவளித்தல்.

வருங்காலத்தில் குவாரி குத்தகை உரிமங்கள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல்.

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு குறித்த தவறான தகவல்களைப் பரப்பும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுத்தல்.

அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் கனிமங்களுக்கான பசுமை வரியை 50 சதவீதத்திலிருந்து 200 சதவீதமாக உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அமல்படுத்துதல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)