# குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் - 2026

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவித்து நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026-ஆம் ஆண்டில், 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
- **Published**: 2026-06-12
- **URL**: https://news.nammamap.in/press-release/21953-kuruvai-special-package-scheme-2026-districts

---

ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் - 2026 செயல்படுத்தப்படும்

டெல்டா மாவட்டங்களில் வடிமுனைக் குழாய்களைக் கொண்டு சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க ரூ.77.50 கோடி ஒதுக்கீடு

டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை மற்றும் சொர்ணவாரி நெல் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.57.33 கோடி ஒதுக்கீடு

நெல் இயந்திர நடவு / நேரடி நெல் விதைப்பிற்கான ஊக்கத்தொகை, உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்ட உரக்கலவை, விதை நெல் விநியோக மானியம் மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட நெல் இரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும்

வேளாண் பொறியியல் துறை வாயிலாக 2,325 கி.மீ நீளமுள்ள C மற்றும் D வாய்க்கால்கள் ரூ.10 கோடி செலவில் தூர் வாரப்பட்டுள்ளன

நீர்வளத்துறை மூலமாக 4,971 கி.மீ நீளமுள்ள A மற்றும் B வாய்க்கால்கள் ரூ.100 கோடி செலவில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு 97% முடிவுற்றுள்ளன

குறுவை சாகுபடிக்கு 10,714 மெட்ரிக் டன் நெல் விதைகள் மற்றும் 4.02 இலட்சம் மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன

விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு 18 மணிநேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)