# குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் உறுதி

> உலக அளவில் அனுசரிக்கப்படும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம் தொழிலாளர் துறையின் சார்பாக இன்று 12.06.2026 சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அனுசரிக்கப்பட்டது. மாநில அளவிலான குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம், சென்னை, செனாய் நகர், அம்மா அரங்கத்தில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவர் குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என உறுதி அளித்தார்.
- **Published**: 2026-06-12
- **URL**: https://news.nammamap.in/press-release/21957-create-a-child-labour-free-tamil-nadu

---

குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

குழந்தைகளை பணிக்கு செல்வதிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி, அவர்களது எதிர்காலத்தை உறுதிசெய்திட அரசு விரும்புகிறது.

அனைத்து நிறுவனங்களிலும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவோர் மீது தொழிலாளர் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மூலம் மிகக்கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதலில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சன்றிதழ்கள் வழங்கப்பட்டன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)