# அமைச்சர் டாக்டர்.டிகே.பிரபு புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் பணிகள் மற்றும் மாவட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் பல்வேறு பணிகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும், மாவட்ட அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்தும் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே.பிரபு அவர்கள் இன்று (12.06.2026) சென்னை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, ஆணையரகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
- **Published**: 2026-06-12
- **URL**: https://news.nammamap.in/press-release/21959-prabhu-reviews-geology-mining-progress-operations

---

சட்டவிரோத கல்குவாரி பணிகள் மற்றும் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் கனிமங்களை எடுத்துசெல்லுதல் மற்றும் அதனை தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஆய்வு.

இத்துறையின் மூலம் அரசுக்கு வருவாயினை பெருக்குவதுடன், சட்டவிரோத கல்குவாரி மற்றும் சுரங்கப்பணிகள், அனுமதிசீட்டு இல்லாமல் கனிமங்கள் எடுத்துசெல்லுதல் போன்றவற்றை தடுப்பதில் அதிக கவனம் செலுத்த மாவட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்.

சட்டவிதிகளுக்குட்பட்டு நேர்மையாக குவாரி மற்றும் கிரஷர் பணிகள் மேற்கொள்ளும் உரிமதாரர்களின் அனைத்து கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட அலுவலர்கள் களத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் நிர்வாகரீதியான கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி.

விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களின் சொந்த பயன்பாட்டிற்காக ஏரிகள் மற்றும் குளங்களிலிருந்து கட்டணம் இல்லாமல் வண்டல்மண் மற்றும் களிமண் எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)