# ஆவின் கிரீன் மேஜிக் பால் விநியோக நிலை குறித்த விளக்கம்

> ஆவின் கிரீன் மேஜிக் பால் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது குறைக்கப்பட்டதாகவோ வெளியான ஊடகச் செய்திகளை ஆவின் மறுக்கிறது, நுகர்வோர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கிரீன் மேஜிக் பால் உட்பட அனைத்து பால் வகைகளும் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது.
- **Published**: 2026-06-13
- **URL**: https://news.nammamap.in/press-release/21960-aavin-green-magic-milk-distribution

---

ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் வகையான 'Green Magic' பாலின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்பட்டதாகவோ சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.

ஆவின் நிறுவனம் தனது அனைத்து பால் வகைகளையும், அதில் Green Magic பாலும் உட்பட, தொடர்ந்து வழக்கம்போல் விநியோகம் செய்து வருகிறது.

நுகர்வோர்களின் தேவைகளுக்கு ஏற்ப பால் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களும் நுகர்வோரும் இதுபோன்ற தவறான செய்திகளை நம்பி குழப்பமடைய வேண்டாம்.

ஆவின் Green Magic பால் வழக்கம்போல எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து விநியோகம் செய்யப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)