# தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை

> 2026-2027 ஆம் ஆண்டு கலந்தாய்வுக்கான கால அவகாசம் 13.06.2026 உடன் நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 30.06.2026 வரை வழங்கப்பட்டிருக்கிறது.
- **Published**: 2026-06-15
- **URL**: https://news.nammamap.in/press-release/21966-direct-admission-trainees-iti

---

தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 30.06.2026 வரை நீட்டிப்பு

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை

கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும் (அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் ரூ 1000/- கூடுதலாக வழங்கப்படும்)

விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா காலணிகள், விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி வழங்கப்படும்

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் போதே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித் தேர்வராக தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பு/பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழைப் பெறும் வாய்ப்பு

தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக்குகளில் இரண்டாமாண்டு டிப்ளமோ படிப்பில் சேரலாம்

குறிப்பிட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் விடுதி வசதி உள்ளது

தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளிலும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது
---
- [All articles](https://news.nammamap.in/press-release)