# ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ஆய்வுக் கூட்டம்

> மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன.
- **Published**: 2026-06-15
- **URL**: https://news.nammamap.in/press-release/21968-review-meeting-rural-development-panchayat-raj

---

செயல்திறன் குறைவாக உள்ள மாவட்டங்களில் திட்டங்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்.

புதிய மாநில வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு.

குறைந்த நிறைவு சதவிகிதம் உள்ள மாவட்டங்களில் நிலுவையிலுள்ள சாலை மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்.

ஊரக பகுதிகளில் உள்ள 5000 சிறு பாசன ஏரிகளை புதுப்பித்தல், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), கழிவு மேலாண்மை ஆகியவற்றில் உரிய கவனம் செலுத்தி விரைந்து செயல்பட அறிவுறுத்தல்.

திட்டங்கள் தொடர்பாக புகார்கள் வரப்பெற்றால் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)