# ஜூன் 26 - சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் "ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம்" ஆர்வமுள்ள மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் விரைந்து பதிவு செய்ய அழைப்பு

> சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தினமான ஜூன் 26 ஆம் நாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 'ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs' போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
- **Published**: 2026-06-16
- **URL**: https://news.nammamap.in/press-release/21971-sdat-start-run-stop-drugs

---

சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தை (ஜூன் 26) முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 'ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs' போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம் நடத்தப்படுகிறது.

6 கி.மீட்டர் தூரம் நடைபெறும் இந்த ஓட்டம் ஜூன் 26 ஆம் தேதி காலை 6 மணிக்கு காமராஜர் சாலை-பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் தொடங்கி, தீவுத்திடலை வந்தடையும்.

விருப்பம் உள்ளவர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையத்தளத்தில் 22.06.2026 வரை பதிவு செய்துக் கொள்ளலாம்.

போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடைய மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ஓட்டத்தில் பங்கு கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)