# தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைத்திடவும், மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும், மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்து, மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்ற எரிசக்தித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவு

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்ற எரிசக்தித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில், மின் கட்டமைப்பை வலுப்படுத்த புதிய துணை மின் நிலையங்கள் அமைத்தல், மின் பணியாளர்கள் நியமனம், மின் தளவாடங்கள் கொள்முதல் மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்துதல் குறித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
- **Published**: 2026-06-16
- **URL**: https://news.nammamap.in/press-release/21972-tamil-nadu-power-infrastructure-boost-new-substations-staff

---

ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைத்திட உத்தரவு.

மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்க உத்தரவு.

மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்ய உத்தரவு.

மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்திட உத்தரவு.

சென்னை மாநகரப் பகுதியில் சுமார் 2,275 கோடி ரூபாய் மதிப்பில் மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

மாநிலம் முழுவதும் 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையங்கள் ரூ.10,109 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன.

கூடுதலாக 231 புதிய துணை மின் நிலையங்கள் ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளன.

விரைவில் வாட்ஸ்அப் சேவையும் புகார் மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, மின் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems), புதிய அனல்மின் நிலையம் மற்றும் நீர்மின் திட்டங்கள் மூலம் எதிர்கால மின் தேவையையும் பூர்த்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)