# தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் HD KSOE நிறுவனத்தின் உயர்மட்ட அலுவலர்கள் சந்திப்பு

> தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி முதலீட்டில், 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் HD KSOE நிறுவன அதிகாரிகள் சந்திப்பு.
- **Published**: 2026-06-17
- **URL**: https://news.nammamap.in/press-release/21981-hd-ksoe-chief-minister-vijay-shipbuilding-project-thoothukudi

---

தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி (4 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் அமைக்கப்பட உள்ளது.

இத்திட்டம் 15,000 நேரடி வேலைவாய்ப்புகளையும், துணைத் தொழில்கள் மற்றும் உள்ளூர் விநியோகச் சங்கிலி மூலம் மேலும் பல வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

HD KSOE நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.

சிப்காட் (SIPCOT) மற்றும் வ.உ.சி. துறைமுக ஆணையம் (VOCPA) இடையே National Shipbuilding & Heavy Industries Park Tamil Nadu Limited (NSHIPTN) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்திடம் இருந்து முதல் கொள்கை அளவிலான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு திட்டத்திற்கு முழுமையான நிர்வாக ஆதரவும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பும் வழங்கும்.

HD ஹுண்டாய் நிறுவனத்தினர் கப்பல் கட்டும் தளத்தை விரைவில் தொடங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)