# போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

> மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய புள்ளிவிவரங்கள், நலத்திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
- **Published**: 2026-06-17
- **URL**: https://news.nammamap.in/press-release/21985-tamil-nadu-chief-minister-reviews-transport-department

---

பயணிகளின் நலனுக்காக புதிய மென்பொருள் உருவாக்கம் மற்றும் நிகழ்நேர பேருந்து தகவல்கள் வழங்குதல்.

முக்கிய பேருந்து நிலையங்களில் 24x7 கட்டுப்பாட்டு மையங்கள் அமைத்து, அவற்றை போக்குவரத்துக் கழகங்களின் தலைமையகங்கள் மற்றும் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துடன் இணைத்தல்.

மாநிலம் முழுவதும் மகளிருக்கு கட்டணமில்லா பயணத் திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தல்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரப் பேருந்துகளை ஊக்குவித்தல்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து, அவர்களின் நலனைப் பாதுகாத்தல்.

புதிதாகக் கொள்முதல் செய்யப்படும் பேருந்துகள் குளிர்சாதன வசதியுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்.

பணமில்லா பரிவர்த்தனைக்காக ஸ்மார்ட் கார்டு முறையை அமல்படுத்துதல்.

பேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் விதமாக Bus Rapid Transit System (BRTS) திட்ட செயலாக்கம் குறித்து நடவடிக்கை எடுத்தல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)