# அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட் / முது நிலை மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.பெ.விஸ்வநாதன் அவர்கள் தகவல்

> அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான பி.எட் மற்றும் முதுநிலைப் பாடப்பிரிவு மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, தரவரிசைப் பட்டியல் வெளியீடு மற்றும் வகுப்புகள் தொடங்கும் தேதிகள் குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.பெ.விஸ்வநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
- **Published**: 2026-06-18
- **URL**: https://news.nammamap.in/press-release/21990-online-bed-pg-admission-government-colleges

---

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 19.06.2026 முதல் 21.07.2026 வரை.

பி.எட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு 31.07.2026.

பி.எட் விருப்பக் கல்லூரித் தேர்வு 04.08.2026 முதல் 10.08.2026 வரை.

பி.எட் இட ஒதுக்கீடு ஆணை வெளியீடு 14.08.2026.

பி.எட் வகுப்புகள் தொடக்கம் 24.08.2026.

மொத்தம் 21 கல்வியியல் கல்லூரிகளில் 2040 பி.எட் இடங்கள் உள்ளன.

முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பப் பதிவு 19.06.2026 முதல் 31.07.2026 வரை.

முதுநிலை தரவரிசைப் பட்டியல் வெளியீடு 04.08.2026.

முதுநிலை சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு 10.08.2026.

முதுநிலை பொது கலந்தாய்வு 13.08.2026 முதல்.

முதுநிலை வகுப்புகள் தொடக்கம் 19.08.2026.

மொத்தம் 110 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 24,334 முதுநிலை இடங்கள் உள்ளன.

அனைத்து விண்ணப்பங்களும் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யப்பட வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)