# பருவமழை காலத்தில் கொசுக்களால் பரவும் நோய்களை தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

> பருவமழை காலத்தில் கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கவும், கொசு உற்பத்தி இடங்களை கண்டறிந்து கட்டுப்படுத்தவும் பொது சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, புகார்களுக்கு 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- **Published**: 2026-06-18
- **URL**: https://news.nammamap.in/press-release/21991-mosquito-borne-diseases-during-monsoon

---

கொசுக்களின் உற்பத்தி இடங்களை கண்டறிந்து நோய் பரவலை தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கொசு உற்பத்தி தொடர்பாக வரும் ஒவ்வொரு புகாருக்கும் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு, கொசு ஒழிப்புப் பணியாளர்களை ஈடுபடுத்தி ஒருங்கிணைந்த கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு புகாருக்கும் 48 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

துண்டுப்பிரசுரங்கள், பதாகைகள், காட்சிப்பலகைகள் மற்றும் விழிப்புணர்வு அறிவிப்புகள் மூலம் பொதுமக்கள் கூடும் இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

டெங்கு, மலேரியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க, முதிர் கொசு வளர் இடங்களை இரண்டு வாரங்களுக்குள் முற்றிலும் ஒழிக்க மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)