# பழங்குடியின இளைஞர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி: தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை மற்றும் ஐ.ஆர்.டி கும்மிடிப்பூண்டி இணைந்து நடத்திய திட்டத்தில் 100% வேலைவாய்ப்பு!

> பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை மற்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு சாலைப் போக்குவரத்து நிறுவனம் (IRT) இணைந்து "தொல்குடி தொடுவானம்" திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 16 பழங்குடியின இளைஞர்களுக்கு "கனரக மோட்டார் வாகனம்" (Heavy Motor Vehicle - HMV) ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமத்துடன் பொது வில்லை (PSV-Badge) வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.
- **Published**: 2026-06-18
- **URL**: https://news.nammamap.in/press-release/21992-tamil-nadu-tribal-youth-driver-training-employment

---

16 பழங்குடியின இளைஞர்களுக்கு கனரக மோட்டார் வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமத்துடன் பொது வில்லை (PSV-Badge) வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சி முடித்த 16 பழங்குடியின இளைஞர்களுக்கும் 100% நேரடி வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பயிற்சி பெற்றவர்கள் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) மின்சாரப் பேருந்து பிரிவிலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டப் போக்குவரத்துப் பணிமனைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)