# மூன்று நாள் "செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அடிப்படைகள்" பயிற்சித் திட்டம்

> தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), சென்னை, ஜூன் 23 முதல் ஜூன் 25, 2026 வரை EDII, சென்னையில் 'செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அடிப்படைகள்' குறித்த மூன்று நாள் பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்கிறது.
- **Published**: 2026-06-19
- **URL**: https://news.nammamap.in/press-release/22000-foundations-ai-digital-marketing-training-programme

---

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) 'செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அடிப்படைகள்' குறித்த மூன்று நாள் பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்யவுள்ளது.

இப்பயிற்சித் திட்டம் ஜூன் 23, 2026 முதல் ஜூன் 25, 2026 வரை EDII, சென்னையில் நடைபெறும்.

குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அடிப்படை கணினி அறிவு கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், பட்டதாரிகள், தொழில்முனைவோர் மற்றும் பணிபுரியும் வல்லுநர்கள் தகுதியுடையவர்கள்.

வெற்றிகரமாக பயிற்சி நிறைவு செய்த பங்கேற்பாளர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு குறைந்த செலவில் தங்குமிடம் வசதி உள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)