# கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

> தமிழ்நாடு சட்டமன்றத்தில் கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசு எந்த அனுமதியையும் வழங்கக்கூடாது என வலியுறுத்தி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
- **Published**: 2026-06-19
- **URL**: https://news.nammamap.in/press-release/22002-tamil-nadu-assembly-opposes-karnataka-mekedatu-dam-project

---

கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்.

மேகதாது திட்டத்திற்கு தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் உட்பட எந்த அனுமதியையும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசு வலியுறுத்தப்பட்டது.

மத்திய நீர்வள குழுமம் கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ அல்லது அனுமதி அளிக்கவோ கூடாது என வலியுறுத்தல்.

மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தாவா சட்டம், 1956 பிரிவு 4-ன் கீழ் புதிய நடுவர் மன்றம் அமைக்க ஒன்றிய அரசு வலியுறுத்தப்பட்டது.

கர்நாடகாவின் முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பேரவை ஆதரவு தெரிவித்தது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)