# மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் இன்று (22.06.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கன்னிகைபேர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து குறித்து சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் அளித்த அறிக்கை

> திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 5 பெண்கள் உயிரிழந்தனர். முதலமைச்சர் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
- **Published**: 2026-06-22
- **URL**: https://news.nammamap.in/press-release/22007-accident-private-factory-kannigaipair-tiruvallur-district

---

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 இலட்சம் நிவாரணம்

உடல்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி, நல்லடக்கம் செய்வதற்கான செலவை அரசே ஏற்கும்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க உத்தரவு

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ESI மற்றும் PF பயன்களை உடனடியாக வழங்க உத்தரவு

விபத்து குறித்து 24 மணி நேரத்திற்குள் ஆரம்ப அறிக்கை மற்றும் 3 நாட்களுக்குள் முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

Hazardous Industries-களை ஆய்வு செய்ய குழு அமைக்க உத்தரவு
---
- [All articles](https://news.nammamap.in/press-release)