# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க 2600 விடுதி விளையாட்டு வீரர்களின் உணவு, சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கு ரூ.12.67 கோடி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது

> தமிழ்நாடு அரசு, மாநில விளையாட்டு விடுதிகள் மற்றும் மையங்களில் உள்ள 2600 விளையாட்டு வீரர்களுக்கு தினசரி உணவுப்படி, சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கான கூடுதல் நிதியாக ரூ.12.67 கோடி ஒதுக்கியுள்ளது.
- **Published**: 2026-06-22
- **URL**: https://news.nammamap.in/press-release/22008-tamil-nadu-hostel-athletes-food-uniforms-equipment

---

2600 விடுதி விளையாட்டு வீரர்களுக்கான தினசரி உணவுப்படி ரூ.350லிருந்து ரூ.450ஆக உயர்வு.

பள்ளி மாணவ, மாணவியருக்கான சீருடைத் தொகை ரூ.6,000லிருந்து ரூ.15,000ஆக உயர்வு.

கல்லூரி மாணவ, மாணவியருக்கான சீருடைத் தொகை ரூ.10,000லிருந்து ரூ.25,000ஆக உயர்வு.

பள்ளி மாணவ, மாணவியருக்கான தனிநபர் விளையாட்டு உபகரணத் தொகை ரூ.2,000லிருந்து ரூ.10,000ஆக உயர்வு.

உணவு, சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்காக மொத்தம் ரூ.12.67 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)