# சட்டப்படிப்பு சேர்க்கை 2026-2027: சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் அரசு சட்டக்கல்லூரிகளில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகள்

> 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப செயல்முறை நிறைவு, கட்-ஆஃப் மதிப்பெண்கள் வெளியீடு மற்றும் தரவரிசையில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு சேர்க்கை ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டது குறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
- **Published**: 2026-06-22
- **URL**: https://news.nammamap.in/press-release/22011-law-admission-2026-2027-integrated-courses-colleges

---

2026-2027ஆம் கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் காலம் முடிவடைந்தது.

சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் இணைவு பெற்ற அரசு சட்டக்கல்லூரிகளின் சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் 17.06.2026 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

தரவரிசையில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு சேர்க்கைக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் ஜூன் 22, 2026 அன்று சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் விநியோகிக்கப்பட்டன.

ஒதுக்கீடு கடிதங்கள் ஜூன் 23, 2026 முதல் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்பட்டன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)