# தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களில் மிக முக்கியமான திட்டமான "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்", அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக வடிவமைக்கப்பட்டு, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- **Published**: 2026-06-23
- **URL**: https://news.nammamap.in/press-release/22014-maternal-uncle-gold-ring-scheme

---

'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் INR 755.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோர மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செப்டம்பர் 15, 2026 அன்று இத்திட்டம் துவக்கி வைக்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)