# நேரடி நெல் கொள்முதல், நெல் இயக்கம் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

> இன்று (24.06.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை, கூட்டுறவுத் துறை மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்கள் தலைமையில் நேரடி நெல் கொள்முதல், நெல் இயக்கம் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஒருங்கிணைந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- **Published**: 2026-06-24
- **URL**: https://news.nammamap.in/press-release/22033-direct-paddy-procurement-paddy-movement-monsoon-preparedness

---

நடப்பு கொள்முதல் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து அனுமதிக்கப்பட்ட ஈரப்பத அளவுடன் தரமான நெல்லை தடையின்றி கொள்முதல் செய்தல்.

பருவமழை முன்னெச்சரிக்கையாக விவசாயிகளுக்கும் நெல் மூட்டைகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்களில் பராமரிப்பை மேம்படுத்துதல்.

கொள்முதல் நிலையங்கள் மேடான பகுதிகளில் அமைவதையும், மழைநீர் வடிகால் வசதியையும் உறுதி செய்தல்.

நெல் அட்டிகளை சரியான முறையில் அமைத்து, கொள்முதல் விவரங்களுடன் கூடிய அடையாள அட்டை பொருத்துதல்.

மழைக்காலங்களில் தார்ப்பாலின் உறைகள், HDPE வலைகள் மற்றும் நைலான் கயிறுகள் மூலம் நெல் மூட்டைகளை மழைநீரால் பாதிக்கப்படாமல் பாதுகாத்தல்.

நெல் மூட்டைகளின் ஈரப்பதத்தை தொடர்ந்து கண்காணித்து தேவையான காற்றோட்ட வசதி ஏற்படுத்துதல்.

அவசரகாலத் தேவைகளுக்கான உபகரணங்களை (JCB இயந்திரம், மண்வெட்டி, கடப்பாரை, டார்ச் லைட்) தயார் நிலையில் வைத்திருத்தல்.

நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 17%-க்கும் குறைவாக இருக்குமாறு கண்காணித்தல் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையை உறுதி செய்தல்.

வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் உலர்த்திகளை (Dryers) வாங்கி அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நிறுவி தரமான நெல்லை கொள்முதல் செய்ய படிப்படியான செயல் திட்டம் வகுத்தல்.

நெல்லை சேமிப்பதற்கான கூடுதல் இடவசதிகளை உருவாக்குதல், வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களைப் பயன்படுத்துதல் மற்றும் புதிய கிடங்குகள்/கொள்முதல் நிலையங்கள் அமைப்பது குறித்து ஆலோசனை.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி மற்றும் பொருட்களின் தரத்தில் குறைபாடு ஏற்படாத வகையில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுதல்.

நுகர்வோர் பயன்பெறும் வகையில் சன்ன ரக நெல் மற்றும் இதர தானிய வகை பயிர்களை பயிரிட விவசாயிகளை ஊக்குவித்தல்.

பொது விநியோகக் கடைகளில் காலிக் கோணிகள் பதிவேடுகளை பராமரித்து, தேங்கிக் கிடக்கும் பைகளை உடனுக்குடன் கிடங்கிற்கு திருப்பி அனுப்புதல்.

நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான நிலுவைத் தொகை ரூ.129.82 கோடியினை தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NAFED) உடனடியாக விடுவிக்க வலியுறுத்துதல்.

எல்-நினோ காலநிலை நிகழ்வு தொடர்பான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)