# சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கான உணவுப்பொருள் விநியோகத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்

> இன்று (25.06.2026) தலைமைச் செயலகத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தொடர்பான திட்டங்களின் செயல்பாடு மற்றும் மேம்பாடு குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உணவுத் தரத்தை மேம்படுத்துதல், குறித்த நேரத்தில் விநியோகித்தல் மற்றும் ரூ.500 கோடி நிலுவைத் தொகையை வசூலிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
- **Published**: 2026-06-25
- **URL**: https://news.nammamap.in/press-release/22047-food-supply-social-welfare-women-empowerment-schemes

---

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவு வகைகளை வழங்க முயற்சிக்க வேண்டும்.

மதிய உணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், அரசினர் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதை உறுதி செய்து, நன்றாக சமைத்திட வேண்டும்.

காலை உணவுத் திட்டத்தில் திணை உள்ளிட்ட சிறுதானியம் சார்ந்த உணவு வகைகளைச் சேர்க்க ஆலோசிக்கப்பட்டது.

முதியோர் இல்லங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்திட வேண்டும்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை திட்டங்களுக்குத் தேவையான இதர உணவுப் பொருட்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் அமுதம் பல்பொருள் அங்காடிகளில் கொள்முதல் செய்ய ஊக்குவிக்கப்பட்டது.

கடந்த 5-6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ரூ.500 கோடி தொகையை ஜூலை 15, 2026-க்குள் விரைந்து பெற்று பணப்பட்டுவாடா செய்திட அறிவுறுத்தப்பட்டது.

மேற்காணும் திட்டங்களின் உணவுப் பொருட்களை எந்தவித தாமதமும் இன்றி உரிய நேரத்திற்கு கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)