# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்தார்கள்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.6.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, பாலவாக்கம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்தார்கள்.
- **Published**: 2026-06-28
- **URL**: https://news.nammamap.in/press-release/22054-special-national-polio-immunization-camp

---

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் 5 வயதிற்குட்பட்ட 52.91 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

இம்முகாமிற்காக 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.

பிறமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் வசிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

இப்பணிகளில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)