# புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் நிகழ்நேர தரவுகளை (Real-Time) உடனுக்குடன் தமிழ்நாடு மின்வாரியத்துடன் பகிர்வது இனி கட்டாயம். தவறும்பட்சத்தில் மின்உற்பத்தி நிறுவனங்களின் மின் உற்பத்தியில் 10% மின் கணக்கீடு கழித்து கணக்கிடப்படும் - மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தகவல்.

> தமிழ்நாடு அரசு அனைத்து புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களையும், மாநில மின் சுமை பகிர்மான மையத்துடன் (SLDC) நிகழ்நேர தரவுகளை SCADA மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பகிர வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது. தவறும்பட்சத்தில், தமிழ்நாடு மின்சார கட்டமைப்பு விதிமுறை 2026-இன் படி, மின் கணக்கீட்டில் குறைப்பு மற்றும் மின் அனுப்புகை செயல்முறைகளிலிருந்து விலக்கு போன்ற அபராதங்கள் விதிக்கப்படும்.
- **Published**: 2026-06-30
- **URL**: https://news.nammamap.in/press-release/22064-renewable-power-plants-share-data-tangedco-penalty

---

அனைத்து புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களும் மாநில மின் சுமை பகிர்மான மையத்துடன் (SLDC) நிகழ்நேர தரவுகளை கட்டாயம் பகிர வேண்டும்.

அனைத்து காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கும் SCADA மூலம் நிகழ்நேர தரவுத் தொடர்பு வசதியை ஏற்படுத்துவது கட்டாயமாகும்.

நிகழ்நேர தரவு வசதியை ஏற்படுத்தாத மின் உற்பத்தி நிலையங்களுக்கு, ஆரம்பத்தில் 10% மின் உற்பத்தி மின் கணக்கீட்டிலிருந்து விலக்கப்படும்.

30 நாட்களுக்குப் பிறகு முழு மின் உற்பத்தியும் மின் அனுப்புகை மற்றும் விலகல் கணக்கீட்டு செயல்முறைகளில் இருந்து விலக்கப்படும்.

45 நாட்களுக்குப் பின்னரும் தரவுகள் ஒருங்கிணைக்கப்படவில்லையெனில், மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) விதிமுறைகளின்படி SLDC மேல்நடவடிக்கை எடுத்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தெரிவிக்கும்.

ஜூன் 2026 மாதத்திற்கான மின் ஆற்றல் கணக்கீடு மற்றும் சரிசெய்தல் பணிகள் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) மூலம் மேற்கொள்ளப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)