# தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித்திறனாய்வுக் கூட்டம்

> மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஜா. முகமது பர்வேஸ் தலைமையில் தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித்திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தொழிலாளர்களின் நலனை மையமாகக் கொண்ட நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம், மனுக்களுக்கு விரைவான தீர்வு, நிலுவை இன்றி செயல்படுதல், கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்த நடவடிக்கை போன்ற முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
- **Published**: 2026-07-01
- **URL**: https://news.nammamap.in/press-release/22073-performance-review-meeting-labour-officials

---

தொழிலாளர் நலனை மையமாகக் கொண்ட நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்துடன் செயல்பட வேண்டும்.

தொழிலாளர் துறை அலுவலகங்கள் மற்றும் 20 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பெறப்படும் அனைத்து மனுக்களின் மீதும் உடனடியாக தீர்வு கண்டு, நிலுவை ஏதுமின்றி செயல்பட வேண்டும்.

இணையதளத்தில் உரிமம் கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும்.

கொத்தடிமைத் தொழிலாளர்கள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களை கண்டறிந்து உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து அலுவலர்களும் உரிய நேரத்தில் அலுவலகத்திற்கு வருகை புரிந்து சரிவர பணியாற்ற வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)