# சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தொழிற்சாலைகளில் திடீர் கள ஆய்வு - மாசுக்கட்டுப்பாட்டு விதிமீறிய தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை

> மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர். வே.க. ராஜீவ் அவர்கள் நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள சாயம், சலவை, தோல் மற்றும் பிற தொழிற்சாலைகளில் திடீர் கள ஆய்வுகளை மேற்கொண்டு, மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய தொழிற்சாலைகள் மீது மின் இணைப்பு துண்டிப்பு, இடிப்பு மற்றும் மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
- **Published**: 2026-07-01
- **URL**: https://news.nammamap.in/press-release/22076-environment-minister-industries-pollution-norms-action

---

நாமக்கல் மாவட்டத்தில் 22 தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அனுமதியின்றி இயங்கிய 5 சாயத் தொழிற்சாலைகள் இடித்து அகற்றப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலைகள் கழிவுநீரை முழுமையாக சுத்திகரித்து மறுபயன்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

பெருந்துறை சிப்காட் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மீண்டும் இயங்கும்போது காற்று மாசு கட்டுப்பாடு கருவிகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக இயக்க அறிவுறுத்தப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கிய 20 சாயத் தொழிற்சாலைகளை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறைகளை நிவர்த்தி செய்யாமல் மீண்டும் இயங்கும் தொழிற்சாலைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)