# தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் ரூ. 24.71 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன மாணவர் விடுதிக் கட்டடத்திற்கு மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள் அடிக்கல் நாட்டினார்!

> தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பெருங்குடி வளாகத்தில், ரூ. 24.71 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய நவீன மாணவர் விடுதிக் கட்டடத்திற்கு மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.
- **Published**: 2026-07-02
- **URL**: https://news.nammamap.in/press-release/22082-law-minister-new-hostel-university

---

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பெருங்குடி வளாகத்தில் புதிய நவீன மாணவர் விடுதிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த விடுதிக் கட்டடம் ரூ. 24.71 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ளதுடன், 240 மாணவர்களுக்கு இடமளிக்கும்.

பொதுப்பணித் துறையின் (PWD) மூலம் 4,160.70 சதுர மீட்டர் (44,785.40 சதுர அடி) பரப்பளவில், தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட உள்ளது.

இத்திட்டம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் உகந்த தங்குமிடச் சூழலை உறுதி செய்து, பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)