# தாயுமானவர் திட்டத்தில் ஜூலை 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம்

> முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், ஜூலை 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில், சென்னை மாநகரில் உள்ள 18 மண்டலங்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் வீடு தேடி விநியோகம் செய்யப்படும்.
- **Published**: 2026-07-02
- **URL**: https://news.nammamap.in/press-release/22086-cm-thayumanavar-scheme-pds-door-delivery

---

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், ஜூலை 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.

சென்னையில் உள்ள 18 மண்டலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வீடு தேடி விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பயனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)