# மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக புனரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு

> உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக புனரமைப்புப் பணிகள், புகார் தீர்வு நடைமுறைகள் மற்றும் கிடங்குகள், அரிசி ஆலைகளில் CCTV கண்காணிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
- **Published**: 2026-07-03
- **URL**: https://news.nammamap.in/press-release/22089-minister-inspects-civil-supplies-corporation-renovation-operations

---

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முடித்தல்.

புனரமைப்பு நடைபெறும் இடங்களில் உள்ள தேவையற்ற பழைய பொருட்கள் மற்றும் பயன்படுத்தப்படாத தளவாடங்களை அகற்றுதல்.

பணியாளர்கள் தங்களது பணியிடங்களை எப்போதும் சுத்தமாகவும் முறையாகவும் பராமரிப்பதை உறுதி செய்தல்.

உழவர் உதவி மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்களை அனைத்து நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகங்கள், நேரடி கொள்முதல் நிலையங்கள் மற்றும் நெல் சேமிப்பு கிடங்குகளில் விளம்பரப்படுத்துதல்.

கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் பொருத்தப்பட்டுள்ள பழுதடைந்த CCTV கண்காணிப்பு கேமராக்களை உடனடியாக பழுதுநீக்கி முழு செயல்பாட்டிற்கு கொண்டு வருதல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)