# தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் - 2013ல் ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் எழுதியுள்ள கடிதம்

> தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் - 2013ல் ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- **Published**: 2026-07-06
- **URL**: https://news.nammamap.in/press-release/22098-cm-letter-food-security-act-amendment-tamil-nadu

---

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் - 2013இன் பிரிவு 3, உட்பிரிவு (1)-ன் முதலாவது வரம்பு நிபந்தனைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், தற்போதைய நடைமுறையான மாதத்திற்கு முப்பத்தைந்து கிலோ கிராம் உணவு தானியங்கள் வழங்கும் உரிமையைத் தொடர வேண்டுமென்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)