# மாண்புமிகு அமைச்சர் பொது விநியோகத் திட்டத்திற்கான நெல் கொள்முதல், சேமிப்பு, அரவை மற்றும் அரிசி விநியோகம் குறித்து ஆய்வு

> மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தலைமையில், தமிழ்நாடு முழுவதும் நெல் கொள்முதல், சேமிப்பு, அரவை மற்றும் பொது விநியோகத் திட்டத்திற்கு அரிசி விநியோகம் தொடர்பான பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- **Published**: 2026-07-07
- **URL**: https://news.nammamap.in/press-release/22114-minister-reviews-paddy-procurement-storage-pds

---

விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதலை தடங்கலின்றி, குறித்த நேரத்தில், 17% ஈரப்பதத்திற்கு மிகாமல் அரசு தரநிலைகளுக்குட்பட்டு மேற்கொள்ள வேண்டும்.

வேளாண்மை மற்றும் வருவாய்த் துறைகளுடன் இணைந்து நெல் சாகுபடி பரப்பளவு மற்றும் ரகங்களைச் சரிபார்க்க வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத அளவிடும் கருவிகளைச் சரிபார்த்து, பருவமழைக்காலத்திற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

சேமிப்புத் திறனை மேம்படுத்தி, அரிசி சேமிப்பு நாள் கண்டறியும் கருவிகளை (Age testing Device) அமைக்க வேண்டும்.

போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் நவீன அரிசி ஆலைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து அரவைத் திறனை அதிகரிக்க வேண்டும்.

பொது விநியோகத் திட்டத்திற்கான அரிசி அரவை மற்றும் விநியோகத்தை குறித்த நேரத்தில் உறுதி செய்து, பயன்படுத்தப்பட்ட சணல் சாக்குகளை முறையாக நிர்வகிக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை கடுமையாகக் கண்காணித்து, தரம் குறைந்த பொருட்களை நிராகரித்து, உயர்தரமான, பாதுகாப்பான உணவுப் பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படைத்தன்மை, செயல்திறன், பொறுப்புணர்வுடன், விவசாயிகளின் நலன் மற்றும் பொதுமக்களுக்கு தடையற்ற தரமான உணவுப் பொருள் விநியோகம் உறுதி செய்யப்பட வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)