# போக்குவரத்துத் துறை அமைச்சர் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ரிக்ஷாக்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கினார்

> போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.விஜய் தமிழன் பார்த்திபன் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மீதான புகார்கள் குறித்து ஆலோசனை நடத்தி, பாதுகாப்பு கதவுகள், முதலுதவிப் பெட்டி மற்றும் அவசர உதவி எண்கள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய அறிவுரை வழங்கினார்.
- **Published**: 2026-07-07
- **URL**: https://news.nammamap.in/press-release/22115-minister-discusses-auto-rickshaw-school-children-safety

---

பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களின் இருபுறமும் முறையான பாதுகாப்புத் தடுப்புக் கதவுகள் (Safety Doors/Grills) பராமரிக்கப்பட வேண்டும்.

அவசரக் காலப் பயன்பாட்டிற்கான முதலுதவிப் பெட்டி (First Aid Box) பராமரிக்கப்பட வேண்டும்.

அவசர காலக் காவல் துறை உதவி எண்கள் (Emergency Helpline Numbers) வாகனங்களில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து போக்குவரத்துத் துறையினரும் மேற்கண்ட அறிவுரைகளை உறுதி செய்ய வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)