# நகராட்சி நிர்வாகம் மற்றும் குடீநீர் வழங்கல் துறை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்திரவின் பேரில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டம்

> சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான திருத்திய நிர்வாக அனுமதி ரூ.1035.61 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் M/S.SUEZ Project International Private Limited நிறுவனத்துடன் 19.06.2026 அன்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
- **Published**: 2026-07-08
- **URL**: https://news.nammamap.in/press-release/22118-salem-24x7-water-supply-project

---

சேலம் மாநகராட்சியில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான திருத்திய நிர்வாக அனுமதி ரூ.1035.61 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் சேலம் மாநகராட்சிக்கும் M/S.SUEZ Project International Private Limited நிறுவனத்திற்கும் இடையே 19.06.2026 அன்று கையெழுத்தானது.

இத்திட்டம் முதல் வருடத்தில் குடிநீர் உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தும், அடுத்துள்ள நான்கு ஆண்டுகளில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனம் இத்திட்டத்தினை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ரூ.3259.73 கோடி மதிப்பீட்டில் தொடர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)