# மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

> சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. கே. ஜெகதீஸ்வரி தலைமையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் "தோழி" பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
- **Published**: 2026-07-08
- **URL**: https://news.nammamap.in/press-release/22119-minister-review-icds-child-welfare-women-hostel

---

குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை மற்றும் குறியீடுகள் குறித்து தனி கவனம், தொடர் கண்காணிப்பு, சிறப்பு கவனிப்பு ஆகியவற்றை பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும்.

குழந்தைகள் மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கவும்.

வளர்ச்சி கண்காணிப்பு, சத்துமாவு, சூடான சமைத்த மதிய உணவு, முட்டை மற்றும் முன் பருவக் கல்வி போன்ற சேவைகள் சரியான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

களப்பணியாளர்கள் ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு பயன்கள் தவறாமல் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தைகள் மையங்களில் பயனாளிகளின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்த அனைத்து வகையான சிறந்த நடைமுறைகள், சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முன்பருவக் கல்வி பயில வரும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மையங்களில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களை சுத்தமாக பயன்படுத்த வேண்டும்.

திட்டங்கள் உணர்வு பூர்வமானவை என்பதால் எவ்வித குறைபாடுகளுக்கும் இடமளிக்காமல் பணிகளை செவ்வனே செய்ய வேண்டும்.

"தோழி" பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதி கட்டுமானத்திற்கு உபயோகப்படுத்தும் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும், உரிய கால அவகாசத்திற்குள் பணிகள் முடிவடைய வேண்டும் மற்றும் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் கட்டப்பட வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)