# மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கோ.க. அருண்ராஜ் அவர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதார சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெறுவதற்கான "நலம்AI" என்ற உரையாடலுடன் கூடிய செயலியை அறிமுகப்படுத்தி, மேம்படுத்தப்பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, அலைபேசி சார்ந்த மருத்துவப் பயனாளர் சேவைகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியில் வழங்கப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்களைப் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.

> மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கோ.க. அருண்ராஜ் அவர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் "நலம்AI" வாட்ஸ்ஆப் சாட்போட், மேம்படுத்தப்பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு (E-ICU) மற்றும் CSR நிதியில் பெறப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்களை தொடங்கி வைத்தார். மேலும், "My Hospital" QR குறியீடு செயலியையும் தொடங்கி வைத்தார்.
- **Published**: 2026-07-08
- **URL**: https://news.nammamap.in/press-release/22122-minister-inaugurates-nalamai-app-e-icu-medical-equipment

---

சுகாதார சேவைகளை எளிதாகப் பெறுவதற்கான "நலம்AI" எனும் உரையாடலுடன் கூடிய வாட்ஸ்ஆப் செயலி அறிமுகம்.

ரூபாய் 63.48 இலட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு (E-ICU) திறப்பு.

ஃபாக்ஸ்கான், ஹூண்டாய் மற்றும் ரெடிங்டன் ஆகிய நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து (CSR) ரூபாய் 15.05 கோடி மதிப்பீட்டிலான நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டுக்குத் தொடக்கம்.

கழிப்பறைகளின் பராமரிப்பு குறித்த தகவல்கள் மற்றும் புகார்கள் தெரிவிப்பதற்கான "My Hospital" எனும் QR Code செயலியும் அறிமுகம்.

"நலம்AI" செயலி தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் முதற்கட்டமாகச் செயல்படுத்தப்படவுள்ளது.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தால் ERCP மருத்துவ உபகரணம் மற்றும் 20 அதிநவீன மயக்க மருந்து செலுத்தும் கருவிகள் வழங்கப்பட்டன.

ஹூண்டாய் நிறுவனத்தால் பொது அறுவை சிகிச்சை பிரிவு மூன்றாம் நிலை தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவாக மேம்படுத்தப்பட்டது.

ரெடிங்டன் நிறுவனத்தால் கோலெடோகோஸ்கோப் உபகரணம் வழங்கப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)