# உலகத் தரத்திலான நவீன தொழில்நுட்பத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB Ltd) - ஐஐடி, சென்னை (IIT Madras) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி. டி. ஆர். நிர்மல் குமார் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.

> இன்று (09.07.2026) சென்னையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி. டி. ஆர். நிர்மல் குமார் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாட்டின் மின்கட்டமைப்பை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, மின் சேவைகளின் நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் தரத்தினை உயர்த்தும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB Ltd) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (IIT Madras) ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
- **Published**: 2026-07-09
- **URL**: https://news.nammamap.in/press-release/22124-tneb-iit-madras-mou-power-modernization

---

தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB Ltd) மற்றும் ஐஐடி சென்னை (IIT Madras) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

உலகத் தரத்திலான நவீன தொழில்நுட்பத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைமுறைப்படுத்துதல்.

தமிழ்நாட்டின் மின்கட்டமைப்பை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்துதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல்.

மின் சேவைகளின் நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் தரத்தினை உயர்த்துதல்.

செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (ML), தரவு பகுப்பாய்வு (Data Analytics), டிஜிட்டல் ட்வின் (Digital Twin), மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் தொழில்நுட்பங்கள் (AR/VR) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை நிறுவனங்களுக்கு (TNPDCL, TANTRANSCO, TNPGCL, TNGECL) ஐஐடி சென்னை தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் புதுமையான தீர்வுகளை வழங்குதல்.

கூட்டு ஆராய்ச்சி, கொள்கை ஆய்வுகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான நீண்டகால ஒத்துழைப்பு.

மாநிலத்தில் நிலைத்த மற்றும் நீடித்த மின்கட்டமைப்பினை உறுதி செய்து, தடையற்ற மின் விநியோகம் வழங்குதல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)