# வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தும், விபத்தில் சிக்கியவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிட உத்தரவிட்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு.

> வியட்நாம் படகு விபத்து குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தனது துயரத்தை வெளிப்படுத்தினார். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் சடலங்களை கொண்டுவருதல் உள்ளிட்ட அனைத்து நிவாரணப் பணிகளையும் மாநில மற்றும் மத்திய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.
- **Published**: 2026-07-11
- **URL**: https://news.nammamap.in/press-release/22147-vietnam-boat-accident-tamil-nadu-cm-relief

---

விபத்தில் சிக்கியவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல்.

தமிழ்நாடு அரசு அதிகாரிகள், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல்.

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து வழங்குதல்.

உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)