# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் புதுப்பிக்கப்பட்ட பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தைத் திறந்து வைத்து, தமிழ்நாடு முழுவதும் 73,000 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்து, வியாசர்பாடி மாநகர் போக்குவரத்துக் கழக மின்சாரப் பேருந்து பணிமனையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.07.2026) சென்னையில், புதுப்பிக்கப்பட்ட பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தையும் திறந்து வைத்து, 73,000 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்து, வியாசர்பாடி மாநகர் போக்குவரத்துக் கழக மின்சாரப் பேருந்து பணிமனையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- **Published**: 2026-07-13
- **URL**: https://news.nammamap.in/press-release/22155-chief-minister-inaugurates-office-distributes-smart-cards-inspects

---

புதுப்பிக்கப்பட்ட பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் இ-சேவை மையம் திறப்பு.

தமிழ்நாடு முழுவதும் 73,000 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்வு தொடக்கம்.

பெரம்பூரில் 50 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், அரிசி மற்றும் இதர உணவுப் பொருட்கள் வழங்கல்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பெரம்பூர் தொகுதியில் 3 கோடி ரூபாய் வளர்ச்சிப் பணிகளுக்கான முதலமைச்சரின் பரிந்துரைக் கடிதம் வழங்கல்.

வியாசர்பாடி மாநகர் போக்குவரத்துக் கழக மின்சாரப் பேருந்து பணிமனை ஆய்வு.

பயணிகள் வசதிக்காக குளிர்சாதன வசதியுடன்கூடிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பு.

பெரம்பூர் இ-சேவை மையம் பல்வேறு அரசுத் துறைகளின் 275 சேவைகளை வழங்குகிறது.

புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகள்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)